×

‘மாமன்’ படத்தில் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து சூரி நெகிழ்ச்சி...!

 

‘மாமன்’ படத்தில் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. ‘மாமன்’ படத்தில் ராஜ்கிரண் உடன் நடித்தது குறித்து சூரி நெகிழ்ச்சியாக பதிவிட்டுல்கார். அதில், “ராஜ்கிரண் சாரின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். ‘மாமன்’ படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை - அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார்.

அவருடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசிர்வாதம். தன்னம்பிக்கையும், எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாளைப்போல் இருக்கும். நன்றியுடன்… நெஞ்சார்ந்த நன்றியோடு… இந்த பயணத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சூரி.