×

 சூரியின் `மாமன்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்...!

 

சூரி நடித்துள்ள `மாமன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/RFxRhOVGp4U?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/RFxRhOVGp4U/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருக்கிறது.இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு
வெளியிட்டுள்ளது.