‘சொப்பன சுந்தரி’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தை ‘லாக்கப்' படத்தின் இயக்குநரான எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ளார். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்து, கே சரத் குமார் படத்தொகுப்பு செய்துள்ள, 'சொப்பன சுந்தரி' படத்தின் மோஷன் போஸ்டர், மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.