‘சொர்க்கவாசல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்
சொர்க்கவாசல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.ஆர்.ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் நானும் ரெளடி தான் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றுள்ளார். மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இயக்கி இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்க ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. கிறிஸ்டோ சேவியரின் இசையிலும் பிரின்ஸ் ஆண்டனிசனின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகியுள்ளது. படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே வெளியான தகவலின் படி திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியிருப்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. படம் முழுக்க ஜெயிலில் நடப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இதில் கருணாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கைதியாக நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படம் ஆர்.ஜே. பாலாஜியின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி தவிர செல்வராகவன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.