×

பிரபாஸின் 'சலார் 2' படத்தில் இணைந்த பிரபல தென் கொரிய நட்சத்திரம்

 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்  'சலார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது.இந்நிலையில் சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகமான சலார்- Ceasefire கதை இரண்டாம் பாகத்தில் வர இருக்கும் வெயிட்டான சம்பவத்திற்கான முன்கதை போலவே அமைத்திருந்தது. இதற்கு மேலும் ஹைப் கொடுக்கும் அளவுக்கு மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதவாது பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான தி கேங்ஸ்டர் -காப் - அண்ட் தி டெவில் படதின்மூலம் உலக அளவில் அறியப்பட்ட டான் லீ ரியல் கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துபவர். சலார் படமும் கேங்ஸ்டர் கதைக் களத்துடன் நகரும் படம் என்பதால் டான் லீ வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் டான் லீ தற்போது உறுதி செய்துள்ளார்.