×

சூப்பர் ஸ்டார் மகளின் புது வெப்சீரிஸ் - பூஜை போட்டு துவக்கிவைத்த ரஜினிகாந்த்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், தற்போது புது வெப் தொடர் ஒன்றை தயாரிக்க உள்ளார். கோவா படத்திற்கு பிறகு இந்த வெப்தொடரை இயக்குகிறார். அதற்கான பூஜை இன்று துவங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதனை துவக்கி வைத்துள்ளார்.

சௌந்தர்யா தனது மே 6 எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் வெப் தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். வெப் தொடரை நேகா ஆபிரகாம் எழுதி இயக்குகிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் முக்கிய இடத்தில் இருக்கும் அசோக் செல்வன், முதல் முறையாக சௌந்தர்யா உடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த தொடருக்கு ‘கேங்ஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த தொடர் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த துவக்க பூஜை குறித்த  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.