×

ஸ்குவிட் கேம் சீசன் 3 டீசர் ரிலீஸ்...!

 

பிரபல இணைய தொடரான ஸ்குவிட் கேம் சீசன் 3 டீசர் வெளியாகி உள்ளது. 

 கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஸ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம். ஸ்குவிட் கேம் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. <a href=https://youtube.com/embed/Lb6v6AUFWrM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Lb6v6AUFWrM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சீசன் 2 முடிவில் இதற்கான கடைசி சீசனை இந்தாண்டு வெளியிட இருப்பதாக தெரிவித்திருப்பர். அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. அந்த சீசனின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.