"நடிக்க வந்த புதிதில் சில தவறுகளை செய்துள்ளேன்"-ஸ்ரீலீலா பேட்டி
முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, தனுஷ் மற்றும் மம்மூட்டியுடன் நடித்துள்ள ‘ஓம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் . ரஜினிகாந்தின் ‘தர்மன்’, அஜித் குமாரின் ‘டேர் டெவில்’ ஆகிய படங்களில் நடிக்கும் அவர், இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்துள்ள ‘ஆஷிக்கி 3’ என்ற படம் விரைவில் வெளியாகிறது. மற்றொரு இந்தி படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நடிக்க வந்த புதிதில் சில தவறுகளை செய்துள்ளேன். தப்பான முடிவுகளையும் எடுத்துள்ளேன்.
என்னை தேடி வந்த எல்லா படங்களிலும் கையெழுத்திட்டேன். அதை இப்போது திரும்பி பார்க்கும்போது, நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும், சில படங்களை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. நான் எங்கே, எப்போது தவறு செய்தேன் என்பதை கண்டுபிடித்து, இனிமேல் அந்த தவறை செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். எனக்கு பொருத்தமான சிறந்த கதைகளையும், கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பேன்’ என்றார்.