"முதல்முறையாக ரஜினி சாரை பார்த்தபோது பிரமிப்பு அடைந்தேன்"-இப்படி கூறும் முன்னணி நடிகை
ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி: தி பாஸ்’ என்ற படத்தில், ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதல்முறையாக ரஜினி சாரை பார்த்தபோது பிரமிப்பு அடைந்தேன். அவருடன் பணியாற்றுவது முதல்முறை என்பதால், பதற்றத்தில் உறைந்துவிடுவேனோ என்று பயந்தேன். இதனால், என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று, ஷங்கர் சாரிடம் கேட்டுக்கொண்டேன். அதைக்கேட்டு அவர் சிரித்தார். ஷங்கர் சார், ‘ரஜினி சாரை சந்தியுங்கள்’ என்று சொன்னதை கேட்டதும் ஆச்சரியப்பட்டேன். அந்த நேரத்தில், ‘வாஜி வாஜி’ என்ற பாடலுக்கான ஒத்திகையும், அதை தொடர்ந்து படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது.
படப்பிடிப்பின்போது, ரஜினி சார் என்னை இயல்பாக உணர வைத்தார். ஒரு நெருங்கிய நண்பரை போல் என்னிடம் பழகினார். அந்த படத்தில் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, எனக்கான அதிர்ஷ்டம். ரஜினி சார் எளிமையானவர். படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போது எல்லோரையும் சமமாக நடத்துவார். அவருடன் இணைந்து பணியாற்றியது, வாழ்நாளில் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.