பூனைக்குட்டியால் ஸ்ருதி ஹாசனுக்கு நேர்ந்த விபரீதம்
முகத்தில் திடீரென கொப்பளங்கள் ஏற்பட்டது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியது: அஸ்லான் என்ற பூனைக்குட்டியை சில தினங்களுக்கு முன் வாங்கினேன். அஸ்லான் வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, எனது முகம் முழுவதும் கொப்புளங்கள் வந்துவிட்டன. மாம்பழங்களை சாப்பிட்டதால் இப்படி ஆகிவிட்டது என்று முதலில் நினைத்தேன். ஆனால், தோல் மருத்துவரை சந்தித்தபோது தான், அஸ்லானின் உமிழ்நீர் மற்றும் உரோமத்தால், தோல் பிரச்சனை வந்தது தெரியவந்தது.
இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அஸ்லானை பலமுறை சுத்தப்படுத்திய பிறகும், பல மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகும், பிரச்னை சரியாகவில்லை. இதனால் என் வேலை, சருமம், மனநிலை என அனைத்தும் பாதிக்கத் தொடங்கியது. என் ஒவ்வாமையை சமாளித்துக்கொண்டே, அரவணைப்பு மற்றும் பாசத்துடன் அவனுக்குத் தகுதியான முறையில் அன்பு செலுத்த முயற்சித்தேன்.
ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தததால், அஸ்லானை அவரது முந்தைய உரிமையாளிடமே கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. .