×

ராம் சரண் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் தமிழ் ஹீரோயின் -யார் தெரியுமா? 

 
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ என்ற பான் இந்தியா படத்துக்காக, ஒரு பாடல் காட்சியில் ராம் சரணுடன் இணைந்து நடனமாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். இரு வேடங்களில் ராம் சரண் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, சாய் குமார், போமன் இரானி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வரும் இப்பாடலுடன் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது. வரும் ஜூன் மாதம் படம் ரிலீசாகிறது.