☰
×

"நான் எப்படி நடிகையாக மாறினேன் என்று  தெரியவில்லை"-சுருதி ஹாசன் 

 

கடந்த 2000ல் கமல்ஹாசன் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘ஹே ராம்’ என்ற படத்தில் ஆடை வடிவமைப்பு துறையில், தனது தாயார் சரிகாவுடன் இணைந்து பணியாற்றியவர் ஸ்ருதிஹாசன். அப்போது சர்தார் வல்லபாய் பட்டேல் மகளாக நடிக்க உடனே ஒரு சிறுமி தேவைப்பட்டார். பிறகு அந்த கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்தார். இதுபற்றி பேசியுள்ள ஸ்ருதிஹாசன், ‘எனக்கு எப்போதுமே கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை. ஆனால், திடீரென்று நான் எப்படி நடிகையாக மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. அதை நினைத்து இன்றுவரை நான் ஆச்சரியப்படுகிறேன்.

‘ஹே ராம்’ படத்தில் நடித்தது திட்டமிட்ட செயல் கிடையாது. அது மிகவும் தற்செயலாக நடந்தது. எனது பெற்றோர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கச்சிதமான வேலையை எதிர்பார்க்கும் டாஸ்க் மாஸ்டர்கள். அவர்களுடன் பணியாற்றி பாராட்டு பெற்றது என்பது, என்னால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு சிறந்த அனுபவம். எனது இசை தேவைகளுக்காகவும், சொந்தமாக ஏதாவது செய்து சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே ‘லக்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதற்கு பிறகுதான் நடிப்பு மீது எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்தேன்’ என்றார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’, துல்கர் சல்மானுடன் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ போன்ற படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்