×

காதல் முறிவு பற்றி நடிகை சுருதி ஹாசன் என்ன சொல்கிறார் தெரியுமா ?

 
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். கடந்த 2018 முதல் 2020 வரை அவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அப்போது நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலுக்கும், அவருக்குமான காதல் முறிந்திருந்தது. இந்த சிறிய இடைவெளி குறித்தும், காதல் முறிவு குறித்தும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அது வருமாறு:
அப்போது ஏற்பட்ட இடைவெளியில், எனக்குள் இருந்த சிறப்பான விஷயங்கள் வெளியே வந்தது. அவரை பிரிந்தது சோகமாக இருந்தது. மற்றவை அனைத்தும் உண்மையில் சிறப்பாக அமைந்தது. நான் யார் என்பதை தெரிந்துகொண்ட அற்புதமான நேரம் இது. எனக்கு இருந்த மனநிலை பிரச்னைகளையும் சரிப்படுத்த உதவியது. ஆனால், நான் கடுமை​யான பதற்​றம் காரணமாக பெரிதும் அவதிப்​பட்​டதால், அன்றாட நடவடிக்​கையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
எதை தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​கு தெளி​வில்லாமல் இருந்தது. அதனால், லண்டனில் இருந்தபடியே இசை​யின் மூலமாக என்னை நான் மீண்​டும் கண்​டறிந்​தேன். தின​ந்தோறும் எனது ஆடைகளை நானே துவைப்​பது, எனக்​கான உணவை நானே சமைப்​பது, மெட்ரோ ரயி​லில் பயணிப்​பது, திரும்பி வந்து புதி​தாக எழுத பயிற்சி செய்​வது, பிறகு எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் அந்த இசையை சோதித்​து பார்ப்​பது என்று, எனது வாழ்க்​கையை மிகவும் வித்தியாசமாக அமைத்​திருந்​தேன். அதை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.