☰
×

"நான் குழந்தை ஒன்றை தத்தெடுக்கவும் தயார்"-ஸ்ருதிஹாசன் பேட்டி 

 

திருமணம் குறித்து ஸ்ருதிஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தான் இந்த கருத்தாக்கத்திற்கு எதிரானவர் அல்ல என்றும், ஆனால் திருமணத்தை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தைத் தவிர்க்கவே விரும்புவதாகவும் தெளிவுபடுத்தினார். ‘‘எனக்கு ஒரு துணையுடன் வாழ்வது மிகவும் பிடிக்கும்.

ஆனால், எனது வாழ்நாள் முழுவதையும் ஒரே வரையறைக்குள் அடங்கிப்போகாமல் தான் வாழ்ந்திருக்கிறேன்’’ என்று ஸ்ருதி விளக்கினார். ‘‘திருமணத்திற்கான ஆயத்த பணிகள், ஆடம்பரச் செலவுகள், பந்தா காட்டுவது போன்றவற்றை பார்க்கும்போது யாருக்காக நாம் இதைச் செய்கிறோம்? என்றுதான் எனக்குத் தோன்றுகிறது’’ என்றார்.

‘‘நானும் என் துணையும் தினமும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்து வாழ்வதை நான் விரும்புகிறேன், ஆனால் அது ஒரு சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. அதுதான் என் பயம். மற்றபடி வேறொன்றும் இல்லை. நான் திருமணத்தின் எல்லை வரை சென்று வந்திருக்கிறேன். எனது டாக்டரிடம் பேசும்போது, நான் குழந்தை ஒன்றை தத்தெடுக்கவும் தயார் என்பதை அவரிடம் கூறியுள்ளேன். ஒரு தாயாக இருப்பதை நான் மிகவும் விரும்புவேன்’’ என்றார் ஸ்ருதி ஹாசன்.