×

கூலி அப்டேட் :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன் 
 

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படக்குழு குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்றைய நாளின் பிரபலம் குறித்த அப்டேட் தற்போது ரிலீசாகி இருக்கிறது.

ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரின் வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது கூலி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்.இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவிலேயே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இப்படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.