×

ராஜமெளலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் 'SSMB 29' படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தொடக்கம்!

 

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் SSMB 29 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என எழுத்தாளரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் மகேஷ் பாபு. இவர் தற்போது எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க இருக்கிறார். மிகப்பெரிய செலவில், மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது இப்படம்.

இதுகுறித்து எழுத்தாளரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் 'Master Class by Mr.Vijayendra Prasad' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, "மகேஷ்பாபு - ராஜமௌலி படத்தின் படப்பிடிப்பானது அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும். இந்தப் படத்தின் கதையை எழுத கிட்டத்தட்ட எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது என தெரிவித்தார். இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
SSMB 29 அமேசான் காடுகளின் பின்னணியில் சாகசப் படமாக உருவாக்கப்படும். இப்படத்தில் பல வெளிநாடு நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இப்படம் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாடு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் சார்பில் கே.எல்.நாராயணா மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத புதிய உலகத்தை இயக்குநர் ராஜமௌலி திறக்கப் போகிறார் என்று எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிரிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது SSMB 29 திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் (Pre Production) வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மகேஷ் பாபு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு கருடா என்ற தலைப்பு வைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.