STR49 படத்தின் அசத்தல் அப்டேட்... சிம்புவுடன் இணைந்த சந்தானம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
சிம்புவின் 49-வது படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியானது ‘பத்து தல’. 2 ஆண்டுகளாக அவர் நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை. அடுத்து அவர் மணிரத்னம் - கமல் காம்போவில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஜுன் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில், “ஒருநாள் சிம்புவிடமிருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்கிறாயா? எனக் கேட்டார். அவர் கேட்டால் எப்போதும் ஆமாம் என்றுதான் சொல்லுவேன். எனது படத்தில் பிஸியாக இருந்தாலும் சிம்பு கேட்டதால் உடனே சரி என்றேன். எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.