×

விஜய் சேதுபதி படத்தின் சக்ஸஸ் மீட் -ஓடிடியில் எப்போது தெரியுமா ?

 

விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற படம் தலைவன் தலைவி .இப்படம் வருகிற 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.இப்படத்தின் வெற்றி விழா பற்றிய செய்தியை இப்பதிவில் நாம் காணலாம் 
 பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 25-வது நாளை நிறைவு செய்துள்ளது.
கடந்த மாதம் 25-ந்தேதி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கணவன், மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றி விழாவை படக் குழுவினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ‘தலைவன் தலைவி’ படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூளித்துள்ளது .