×

 ‘தக் லைஃப்’ படத்தின் 'சுகர் பேபி' பாடல் ரிலீஸ்...!
 

 

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் சுகர் பேபி பாடல் வெளியாகி உள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த 17ஆம் தேதி படத்தின் டிரெய்லர் படக்குழு வெளியிட்டது.