×

‘ரெஜினா’ -க்கு யு/ஏ... சுனைனா படத்தின் புதிய அப்டேட் 

 

சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெஜினா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சுனைனா. மற்ற நடிகைகள் அவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெஜினா’. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

ரெஜினா கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் வைத்து இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் மாறுப்பட்ட நடிப்பை சுனைனா வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

த்ரில்லர் டிராமா வகையை சேர்ந்த இந்த படதை எல்லோ பியர் புரொடக்‌ஷன் எல்எல்பி நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சதீஷ் நாயர் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.