×

சுந்தர் சி படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி... ஆரம்பிக்கவே இல்ல..அதுக்குள்ளேயா ? 

 

 சுந்தர் சியின் ‘அரண்மனை 4’ படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹாரர் மற்றும் காமெடி படங்களை இயக்கி ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. காமெடி கலந்து ஹாரரில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி அதே வரவேற்பை பெற்றது. 

தற்போது அந்த வரிசையில் அரண்மனை 4-ஆம் பாகம் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. லைக்கா தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டது. 

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் சில படங்களில் கமிட்டாகியுள்ளதால் ‘அரண்மனை 4’ படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டது. அதனால் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறொரு ஹீரோவை சுந்தர் சி தேடி வருவதாக தகவல் கசிந்துள்ளது.