“மூக்குத்தி அம்மன்” படத்தில் நயன்தாரா எப்படி நடிக்கிறார் தெரியுமா?" -சுந்தர் சி தகவல்
Mar 12, 2026, 06:00 IST
சென்னை தி.நகரில் நடைபெற்ற பியூட்டிஷியன் கிருஷ்ணாவின் பேஜ் 3 லக்ஸரி சலூன் அண்ட் மேக்ஓவர் ஸ்டுடியோ திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி கூறியது: ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து வெளியேற ‘சங்கமித்ரா’ திரைப்படம் காரணமல்ல. ‘சங்கமித்ரா’ படத்தை இப்போது ஆரம்பிக்க முடியாது, எனக்கு நிறைய அடுத்தடுத்து கமிட்மெண்ட்ஸ் இருக்கிறது. அந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பிக்க இன்னும் இரண்டு வருடம் ஆகலாம்.
இப்போது இருக்கிற கமிட்மெண்ட்ஸ் காரணமாக இரண்டு வருடம் வரை பிஸியாக இருக்கிறேன். அதன் பிறகு அப்படம் ஆரம்பிக்கும். “முக்குத்தி அம்மன்” படத்தில் நயன்தாரா முழுக்க அம்மன் கெட்டப்பில் வருகிறார். அதே மாதிரி பாகங்கள் தொடருமா என்பது பற்றி நான் இப்போது சொல்ல முடியாது. படம் வரும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.