சுந்தர்.சி - வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. ரசிகர்களின் விமர்சனம்...!
Apr 24, 2025, 12:54 IST
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி - வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த நெட்டிசன்களின் கருத்துகளை பார்ப்போம்.
வழக்கமான வடிவேலு - சுந்தர்.சி டெம்ப்ளேட்டில் படம் இருப்பதாகவும், 65 வயதிலும் வடிவேலு காமெடி நடிகராக ஸ்கோர் செய்கிறார் என்றும் நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.