×

சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் `கேங்கர்ஸ்' பட டிரெய்லர் இன்று மாலை ரிலீஸ்

 

சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்'  படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'அரண்மனை 4’ மற்றும் மதகஜராஜா படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். மேலும், நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே, வடிவேலுவை வைத்து  ‘கேங்கர்ஸ்’ என்னும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி. இதில் கேத்ரீன் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.