×

தொழில் அதிபராக மாறிய பிரபல நடிகை சன்னி லியோன் 

 

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நடிப்பில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதான் சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகும் முதல் தமிழ் படமாகும். ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஆனால் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படம் இது தான். இந்த படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடிகர் சதிஷ் மற்றும் நடிகை தர்ஷா குப்தா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இந்நிலையில், நடிகை சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அவர் புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். மதுபானம் மற்றும் பார் உள்ளிட்ட வசதிகளுடன் நட்சத்திர விடுதிகளுக்கு ஈடாக இந்த உணவகத்தை கட்டியுள்ளார் நடிகை சன்னி லியோன்.