"நடிப்பதை நிறுத்திய பின் இதைத்தான் செய்ய போகிறேன்" -சூப்பர் ஸ்டார் சொன்ன பதில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் .இவர் இந்த வயதிலும் பல படங்களில் நடித்து வருகிறார் .இவரை வைத்து படமெடுக்க பலர் போட்டி போட்டு வருகின்றனர்
தமிழ்நாட்டை தாண்டி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் ரஜினிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ரஜினியின் படங்களை விரும்பி பார்ப்பதும், அவர் பேச்சை கேட்பதும் உண்டு.
ரஜினிகாந்த், சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பின்பு என்ன செய்யப்போகிறார் என்பது குறித்த கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.
வேள்பாரி புத்தகத்தின் 1 லட்சம் பிரதிகள் விற்றதை அடுத்து, அதன் வெற்றிவிழா நடந்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் ரஜினிகாந்த், கோபிநாத், ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரஜினி, இந்த விழாவில் தனது ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்து பேசினார். அதில், தான் ஓய்வுக்கு பின் நிறைய புத்தகங்கள் படிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்
ரஜினி, தனது ஓய்வில் சுய சரிதை எழுதுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.