‘எம்புரான்’ ட்ரெய்லரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்... பிருத்விராஜ் நெகிழ்ச்சி....
மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கி உள்ள “எம்புரான்” திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக பிருத்விராஜ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை பட குழுவினர் உருவாக்கியுள்ளனர். அதை நடிகர் ரஜினிகாந்துக்கு பிருத்விராஜ் காண்பித்துள்ளார். இந்த ட்ரெய்லரை பார்க்கும் முதல் மனிதர் ரஜினிகாந்த் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் படத்தின் ட்ரெய்லரை பார்த்த பின் ரஜினிகாந்த் பாராட்டியதை தன்னுடைய வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் எப்போதும் ரஜினிகாந்தின் ரசிகன் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.