×

மாதேஷ்வரர் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம்...!

 


ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் மாதேஷ்வரர் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் நெல்சன். கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.