பாலாவின் வணங்கான் எப்படி இருக்கு... தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி பதிவு..!
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விரைவில் ரிலீஸாகவிருக்கும் படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
வணங்கான் படத்தை ஹிட் படமாக கொடுக்க முனைப்போடு உழைத்திருக்கிறார் பாலா. படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில், "பாலா இயக்கிய வணங்கான் படத்தை பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறேன். வாயடைத்து போய்விட்டேன். அருண் விஜய்யின் நடிப்பு அபாரம். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். பாலா மீண்டும் ஒருமுறை தன்னை யார் என்று நிரூபித்துவிட்டார். லவ் யூ பாலா அண்ணா" என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார்.