×

விறுவிறுப்பாக நடக்கும் ‘கங்குவா’ படப்பிடிப்பு... சூர்யா படத்தின் புதிய அப்டேட் !

 

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

சூர்யாவின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. 

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 

ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது. 25 நாட்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பில் ‘கங்குவா’ இரண்டாம் பாகத்திற்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 75 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் வரும் நவம்பர் மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.