×

விஜய்க்கு போட்டியா..? மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்திய நடிகர் சூர்யா..

 


 நடிகர் சூர்யா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களுக்கு அவரது அறக்கட்டளை சார்பில் உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய், அவரது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகளை அண்மையில் வழங்கினார்.

இந்நிலையில் அதேபோல், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் நடிகர் சூர்யா, அவரது அகரம் அறக்கட்டளை சார்பில்  பரிசளித்து ஊக்கப்படுத்தினார். இநிகழ்ச்சியில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் சூர்யா நேற்று அவரது 49வது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.