×

சிறுத்தை சிவா படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகும் சூர்யா!?

 

சூர்யா தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி மார்க்கெட் கொண்ட நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விக்ரம் படத்தில் அவர் இடம் பெற்ற 5 நிமிட சிறப்பு தோற்றத்திற்காக இந்தியா முழுக்க அவர் ட்ரெண்டானார்.

அதையடுத்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து சிறுத்தை சிவா மற்றும் சுதா கொங்குரா, வெற்றிமாறன் ஆகியோர் படங்களில் நடிக்க இருக்கிறார்.

சூர்யாவிற்கு தெலுங்கு நடிகர்களுக்கு இணையாக தெலுங்கில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனாலும் அவர் தற்போது வரை நேரடியாக தெலுங்கில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்நிலையில் சூர்யா நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னராக தில்ராஜு தயாரிப்பில் போயப்படி ஸ்ரீனு இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது.

தற்போது சிறுத்தை  சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் தெலுங்கிலும் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.