×

‘கங்குவா’ ஷூட்டிங்கில் இணைந்த வில்லன் நடிகர்.. புதிய அப்டேட் 

 

 சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ படத்தில் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளார். 

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.  இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பிரபல வில்லன் நடிகரான ஜெகபதி பாபு இணைந்துள்ளார். அதில் சூர்யா மற்றும் ஜெகபதி பாபு இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.