×

வெறித்தனமாக உருவாகியுள்ள 'கங்குவா'... மாஸ் லுக்கில் சூர்யா.. மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ !

 

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். 

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் அதிகபட்ச அனிமேஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெறித்தனமான லுக்கில் சூர்யா இருக்கிறார். காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளின் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.