×

ஒப்புதல் அளித்த அரசு… ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிடத் தயங்கும் சூர்யா… இதுதான் காரணமாம்!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சூரரைப் போற்று’. இப்படத்தில் அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2D என்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். சூரரைப் போற்று படம் அமேசான் பிரைம் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ்
 

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சூரரைப் போற்று’. இப்படத்தில் அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2D என்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார்.

சூரரைப் போற்று படம் அமேசான் பிரைம் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் இப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கபட்டது. இந்தப் படத்தில் இந்திய விமானப்படை குறித்த காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. அதனால் முறையாக இந்திய விமானப்படை படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தடையில்லா சான்றிதழ் அளித்தால் படத்தை வெளியிட முடியும். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்று கூட வெளியிட்டிருந்தார்.

அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் இருந்த பட்சத்தில் தற்போது மத்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டது.

ஆனாலும் அறிவிக்கப்பட்ட நாளான, அக்டோபர் 30-ம் தேதி வெளியிடத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஓடிடி-யில் வெளியான தமிழ் படங்கள் அந்தளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்பதே நிதர்சனம். சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் படம்’ அமேசான் பிரைமில் வெளியானது. இருந்தாலும் அப்படம் உடனே பைரஸி தளங்களிலும் வெளியானதால் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காமல் போனது.

தற்போது இவ்வளவு பெரிய படத்தை ஓடிடி-யில் வெளியிடுவது என்று முடிவெடுத்த சூர்யா தற்போது படத்தை தியேட்டரில் வெளியிட்டால் படம் இன்னும் அதிகமாக மக்களைச் சென்றடையும் என்று கூட சூர்யா நினைத்திருக்கலாம்.

சூரரைப் போற்று படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் படம் வெளியாக இருப்பது தியேட்டர்களிலா? அல்லது ஓடிடி? யிலா! பதிலுக்காகக் காத்திருப்போம்!