×

சூர்யாவின் 43-வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது

 

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.