சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தின் டிக்கெட் முன்பதிவு அப்டேட்...!
Apr 23, 2025, 16:35 IST
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். இந்நிலையில், ரெட்ரோ படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.