நானி தயாரித்த 'கோர்ட்' படத்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா...!
Apr 24, 2025, 16:29 IST
நானி தயாரித்துள்ள கோர்ட்' படத்தை பார்த்த சூர்யா - ஜோதிகா படக்குழுவை பாராட்டியுள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தயாரிப்பில் அண்மையில் 'கோர்ட்' என்ற படம் வெளியானது.'கோர்ட்' படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும், ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ.10 கோடி வசூலை குவித்துள்ளது.