தலைநகரை புரட்டிபோட்ட மிக்ஜாம்!- உதவிகரம் நீட்டிய சூர்யா- கார்த்தி.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்கையை இழந்த நிலையில் முதல் ஆளாக வந்து நிதியுதவி கொடுத்து உதவிகரம் நீட்டியுள்ளார்கள் நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி.
மழைநீர் வடிகால் பணிகள் என என்னதான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தாலும் இயற்கையின் கோரமுகத்தை எவராலும் கட்டுபடுத்த முடியவில்லை. இது வரை பெய்யாத வரலாறு காணாத மழையை சென்னை சந்தித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழ கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாமல் பல பகுதிகள் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது. பல இடங்களில் அரசும், தன்னார்வளர்களும் மீட்பு பணிகள், உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். . இந்த நிலையில் நடிகர்களான சூர்யா- மற்றும் கார்த்தி இருவரும் மக்களுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். அந்த தொகை மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களாக அவர்களது, ரசிகர் மன்றம் மூலமாக சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.