நவம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் சூர்யா படம் -என்ன படம் தெரியுமா ?
ழகரம் ஸ்டுடியோஸ், 2டி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, ஜித்து மாதவன் இயக்க, சூர்யா நடிக்கும் 47வது படத்துக்கு ‘சீன்’ என்று பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக நஸ்ரியா நாசிம் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நஸ்லென் கே.கபூர், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் நடிக்கின்றனர். வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார்.
அஜ்மல் ஷபு எடிட்டிங் செய்கிறார். காமெடி வித் ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தை ஜோதிகா, சூர்யா இணைந்து தயாரிக்கின்றனர். ஜெய தாமோதரன் இணை தயாரிப்பு செய்கிறார். இன்பராஜ் ஐபிஎஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களின் தொடர்ச்சியான வெற்றி ரசிகர்களை மகிழ்வித்து வரும் நேரத்தில், ‘சீன்’ படத்தின் மூலம் சூர்யா ஹாட்ரிக் வெற்றியை வழங்க தயாராகி வருகிறார்.