மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சூர்யா நடித்த வெற்றிப்படம் -எந்த படம் தெரியுமா ?
Feb 13, 2026, 08:00 IST
அமீர் இயக்கத்தில், சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸாகி உலக அளவில் வெளியாக உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற வெற்றிப்படம். அமீர் இயக்குனராக அறிமுகமான படம். திரிஷா கதாநாயகியாக அறிமுகமான படம். அபராஜீத் பிலிம் நிறுவனம் சார்பில் கணேஷ் ரகு படத்தை தயாரித்தார். பாலா இயக்கிய நந்தா படத்தையும் இவர்தான் தயாரித்திருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வருடம் 4 கமர்ஷியல் தமிழ்ப் படங்களை தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளார்.