☰
×

" யாரை ஃபாலோ செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம்"-சூர்யா பேச்சு .

 

சென்னை தி.நகர் அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில், சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47வது ஆண்டு விழா நடந்தது. 
பிறகு மாணவர்களிடையே சூர்யா பேசும்போது, ‘இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால், அந்த ரீல்ஸ் என்பது ஒரு கதைதான். அதனால் நாம் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது. யாரை ஃபாலோ செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். 24 மணி நேரத்தில் எலான் மஸ்க் 23 மணி நேரம் பணியாற்றுவாராம். ஒரு மணி நேரம் தூங்குவாராம். அவர்கள் எங்கிருந்து ஆரம்பித்து இங்கு வந்தார்கள் என்பதை வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காமல், நிறைய பாட்காஸ்ட், அவர்களை பற்றிய ரிசர்ச் ஒர்க் ஆகிவவற்றை கவனித்தால், உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வர அவை உதவும்’ என்றார்.