×

ரயில்களில் சூர்யா போஸ்டர்... புரமோஷன் பணிகளை தொடங்கிய 'ரெட்ரோ' படக்குழு...  

 

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. 

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ரோ’ . சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.‘ரெட்ரோ’ திரைப்படம், மே மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.