×

ஜோதிகாவின் சம்பளத்தை விட சூர்யாவின் சம்பளம் குறைவு -எந்த படத்தில் தெரியுமா ?

 

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர தம்பதிகளாக திகழ்பவர்கள் சூர்யா, ஜோதிகா. தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கு ஜோதிகா எவ்வளவு முக்கியமானவர் என்பது குறித்து சூர்யா பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர்கள் அளித்துள்ள ஒரு பேட்டியில், சூர்யாவை பற்றி ஜோதிகா பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். அதில், ’காக்க காக்க’ படத்தில் ஜோதிகாவின் சம்பளத்தை விட சூர்யாவின் சம்பளம் குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஜோதிகா கூறுகையில், ‘மிகவும் சிறப்பானவர் சூர்யா. மனிதராகவும், கணவராகவும், நடிகராகவும் எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தவர்.
அவரது சிந்தனையில் எப்போதுமே சமத்துவம் இருக்கிறது. அடிப்படையிலேயே அப்படிப்பட்ட எண்ணம் இருப்பவர்களால் மட்டுமே அதை நன்கு வெளிப்படுத்த முடியும். இல்லை என்றால், அவர்களின் செயல்களில் இதெல்லாம் பிரதிபலிக்காது. அவர்களால் மட்டும்தான் தங்களுடன் இருக்கும் பெண்ணின் விருப்பத்தை மதிக்க முடியும். நான் இங்கே பெண்ணியவாதியாக பேசவில்லை. ஆனால், வீட்டில் நாங்கள் இருவரும் சமம். மேலும், அது உன்னதமான ஒரு மனிதனின் உள்மனதில் இருந்து வருவதால் சாத்தியமாகி இருக்கிறது