சீன் பட ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-சூர்யா என்ன பேசினார் தெரியுமா ?
தமிழ் படவுலகின் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு ‘கருப்பு’, ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளன. வசூலிலும் சாதனை படைத்துள்ளன. தற்போது ’சீன்’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், திடீரென்று ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசிய கருத்துகள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அது வருமாறு:
அன்பை மட்டுமே விதைப்போம். சமூக வலைத்தளத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவை வெளியிடுகிறான் என்பதற்காக, நாம் அதற்கு பதிலளிக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். நாம் நாமாகவே இருப்போம். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் எதுவும் பேச தேவை இல்லை.
அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும், அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம். சிலருக்கு புரியும். முக்கால்வாசி பேருக்கு அது புரியாது. அதனால், உங்கள் எனர்ஜியை வீணாக்கிக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை உண்மையாகவும், நேர்மையாகவும் தினமும் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.