வசூலில் பட்டையை கிளப்பும் `சூர்யாஸ் சாட்டர்டே' திரைப்படம்
Sep 2, 2024, 15:45 IST
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார். சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெரும்பான்மையான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.