காதலர் தினத்திற்கு வெளியாகும் சுசீந்திரனின் 2K Love Story
Jan 8, 2025, 19:20 IST
சுசீந்திரன் இயக்கி உள்ள படம் '2K லவ் ஸ்டோரி'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், அந்தோணி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சுசீந்திரன் - இமான் இணைந்துள்ள 10-வது திரைப்படம் இதுவாகும். 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தின் டீசர் - ட்ரெய்லர்- பாடல்கள் -ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.