×

'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் 2வது பாடல் நாளை ரிலீஸ் என அறிவிப்பு 

 

ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோ நடித்துள்ள திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்' . யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.


இப்படத்தில்  பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர்,  நடிகராக நடிக்கவுள்ளார். இந்நிலையில், 'ஸ்வீட்ஹார்ட்'  படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.