×

ஸ்வீட்ஹார்ட் படத்தின் "ஒருத்தி" வீடியோ பாடல் வெளியானது 
 

 

ரியோ நடிப்பில் வெளியான ஸ்வீட்ஹார்ட் படத்தின் "ஒருத்தி" வீடியோ பாடல் வெளியானது. 

யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

<a href=https://youtube.com/embed/qWExCaSBUo0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qWExCaSBUo0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர். அருணாச்சலேஷ்வரன் உடன் ரியோ நடித்த காமெடி காட்சிகள் மக்களிடம் மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ’ஒருத்தி’ என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.