×

சொகுசு காருக்கு சொந்தக்காரரான டாப்ஸி...

 

பிரபல தென்னிந்திய நடிகை டாப்ஸி, புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான டாப்ஸி, வந்தான் வென்றான், கேம் ஓவர், பிங்க் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். தமிழ் மட்டுமன்றி இந்தி சினிமாவிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் மெபேக் ஜிஎல்எஸ் என்ற காரை அவர் வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.